#+TITLE: தமிழ்க் கணினிக் குழு தமிழ்க் கணினிக் குழு உங்களை வரவேற்கிறது. இக்குழு கட்டற்ற மென்பொருட்களைத் தமிழாக்கம் செய்வதற்கும் பிற தமிழ் கணினி தகவல் தொழில்நுட்பங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கும் உருவாக்கப்பட்டது. [[https://lists.systemreboot.net/listinfo/tamil][tamil@systemreboot.net]] என்ற அஞ்சற்பட்டியில் சேர்ந்துப் பங்கேற்க. * Translation Project Translation Project என்பது பல்வேறு கட்டற்ற மென்பொருள் நிரல்களை மொழிபெயர்க்கப் பயன்படும் தளம். அங்குத் [[https://translationproject.org/team/ta.html][தமிழாக்கக் குழுவொன்றை]] உருவாக்கியுள்ளோம். ** தழிழாக்கத்தில் பங்கேற்பதெப்படி? - [[mailto:tamil@systemreboot.net][tamil@systemreboot.net]] பொது மடலகத்திற்கு எழுதுக. [[https://lists.systemreboot.net/tamil][முந்தைய உரையாடலையும்]] காண்க. - [[https://translationproject.org/domain/index.html][Translation Project யிலிருக்கும் மென்பொருள் தொகுப்புகளிலிருந்து]] ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தமிழாக்கவும். - தமிழாக்கப்பட்ட po கோப்பை அஞ்சற்பட்டிக்கு அனுப்பவும். - அஞ்சற்பட்டியினர் குறைநிரை கண்டு, தேவையானால் திருத்தங்களை மேற்கொண்ட பின், Translation Project தமிழாக்கக் குழுவினரொருவர் உங்கள் பங்களிப்பை Translation Project யில் பதிவேற்றுவார். ** பாணிக் கையேடு தமிழாக்கங்களை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு காலகட்டங்களில் செய்தாலும், அவை ஓரியல்புடையதாகயிருப்பது நன்று. அதற்குச் சிலக் குறிப்புகளைக் கீழ்காணலாம். - கணினியியல் கலைச்சொற்களுக்குப் [[file:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.org][பரிந்துரைக்கப்பட்ட தமிழாக்கங்களைப்]] பயன்படுத்தவும். - ஆங்கிலத்தில் கட்டளை வரி நிரல்களில் கொள்ளிடங்கள் முகப்பெழுத்துகளில் குறிப்பிடப்படுவது வழக்கம். தமிழில் முகப்பெழுத்துகள் இல்லாததால் கொள்ளிடங்களை வேறுபடுத்திக் காட்ட அவற்றைக் கோண அடைப்புக்குறிகளுக்குள் அடைக்கவும். அதாவது "foo ARG" என்பதை "foo <செயலுருபு>" எனத் தமிழாக்குக. * மூலக்கோப்புகள் இவ்வலைத்தளம் Emacs org mode கொண்டு உருவாக்கப்பட்டது. மூலக்கோப்புகள் [[https://git.systemreboot.net/tamil-computing/][இந்த git களஞ்சியத்தில்]] உள்ளன.