#+TITLE: கலைச்சொற்கள் பரிந்துரைக்கப்பட்ட கலைச்சொற்களின் பட்டியலைக் கீழ்காணலாம். இப்பட்டியலின் நோக்கம் [[https://ta.wiktionary.org][wiktionary]] போன்ற அகரமுதலிகளுக்கு மாற்றாகயிருப்பதன்று. நம் தமிழாக்கம் ஓரியல்புடையதாயிருப்பதற்குதவும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியலே இது. இப்பட்டியலில் குறை ஏதேனுமிருந்தால் அதனைப் பற்றி நம் [[mailto:tamil@systemreboot.net][அஞ்சற்பட்டியில்]] குறிப்பிடுக; கலந்துரையாடலாம். - account :: கணக்கு - admin :: மேலாண்மையர் - administration :: மேலாண்மை - application (app) :: நிரல்; app யையும் program யையும் வேறுபடுத்துமாறு app யைச் செயலி என்று பலர் கூறுகின்றனர். ஆனால் செயலி என்றால் processor. அதனுடன் குழப்ப வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் கூட app என்பது program என்னும் கலைச்சொல்லைத் தவிர்த்து உட்கருத்தைத் தெளிவற்றதாக்கும் ஆணவச்சொல்லாகத் தான் அமைகிறது. app யையும் program யையும் வேறுபடுத்தியேயாகவேண்டுமெனில் app யைப் பயனர் நிரல் எனச் சுட்டவும். - argument (to a command) :: செயலுருபு - argument (to a function) :: மதிப்புரு - author (of a program) :: நிரலாசிரியர் - bit :: இருமி, நுண்மி - byte :: இருமித்தொகுதி, எண்ணுண்மி - CD :: குறுவட்டு - child node (of a tree) :: சேய் கணு - chroot :: மாறுவேர் - command :: கட்டளை - command line :: கட்டளை வரி - compile :: தொகு - computer :: கணினி - copyright :: பதிப்புரிமை - data stream :: தரவுத்தொடர் - decrypt :: மறைவிலக்கு - delete :: அழி - directory :: அடைவு - domain :: களம் - domain name :: களப்பெயர் - download :: பதிவிறக்கு - DVD :: இறுவட்டு - encrypt :: மறையாக்கு - error :: வழு, பிழை - exit :: வெளியேறு - file :: கோப்பு - file size :: கோப்பளவு - font :: எழுத்துரு - free software :: கட்டற்ற மென்பொருள் - function (programming) :: செயலாற்றி - garbage collector (computer science) :: குப்பைத்திரட்டி - group :: குழு - group ID (GID) :: குழு எண் - invalid :: ஏற்கத்தகா; இது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். இதன் பின் வல்லினம் மிகும். - library (programming) :: நிரலகம் - license :: உரிமம் - mail :: அஞ்சல், மின்னஞ்சல் - mailing list :: அஞ்சற்பட்டி, மின்னஞ்சற்பட்டி - markup language :: குறிமொழி - module (programming) :: நிரல்கூறு - operating system :: இயங்குதளம் - option (command line options like -l, -h) :: செயல்மாற்றி - others :: பிற - parent directory :: தாயடைவு - parent node (of a tree) :: தாய் கணு - passphrase :: கடவுத்தொடர் - password :: கடவுச்சொல் - process (as in Unix process) :: செயலாக்கம் - process ID (PID) :: செயலாக்க எண் - processor :: செயலி - program :: நிரல் - programming :: நிரலாக்கம் - service :: ஊழியம் - source code :: மூலநிரல் - subdirectory :: சேயடைவு - text :: உரை - upload :: பதிவேற்று - user :: பயனர் - user ID (UID) :: பயனர் எண் - utility :: கருவி - valid :: ஏற்கத்தகு - version :: பதிப்பு - website :: வலைத்தளம்; இணையம் என்றால் Internet. வலை என்றால் தான் web. ஆகவே website யைச் சுட்ட இணையத்தளம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.