#+TITLE: இலக்கிய நடை நெறி தமிழாக்கங்களை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் இயற்றினாலும், அவை ஓரியல்புடையதாகயிருப்பது நன்று. அதற்குச் சிலக் குறிப்புகளைக் கீழ்காணலாம். * கலைச்சொற்கள் கணினியியல் கலைச்சொற்களுக்குப் [[file:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.org][பரிந்துரைக்கப்பட்ட தமிழாக்கங்களைப்]] பயன்படுத்தவும். * கொள்ளிடங்கள் ஆங்கிலத்தில் கட்டளை வரி நிரல்களில் கொள்ளிடங்கள் முகப்பெழுத்துகளில் குறிப்பிடப்படுவது வழக்கம். தமிழில் முகப்பெழுத்துகள் இல்லாததால் கொள்ளிடங்களை வேறுபடுத்திக் காட்ட அவற்றைக் கோண அடைப்புக்குறிகளுக்குள் அடைக்கவும். அதாவது "foo ARG" என்பதை "foo <செயலுருபு>" எனத் தமிழாக்குக. * (C) பதிப்புரிமை குறி (C) என்ற பதிப்புரிமை குறியை © (U+00A9) எனத் தமிழாக்குக.